நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!
புதுதில்லி:செப்.22-2019
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி முடியும். வேட்புமனுக்கள் ஆய்வு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நடக்கும். வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசிநாள் அக்டோபர் 3 ஆம் தேதியாகும். இந்த இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். 24 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் செயலுக்கு வந்துள்ளன.