2022-க்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடம்!
புதுடில்லி : செப்.13-2019
2022 ஆம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆங்கிலேயர்களால் 1911 முதல் 1931ஆம் ஆண்டுக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய கட்டடத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம். எனவே புதிதாக கட்டம் கட்ட சர்வதேச அளவில் திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய கட்டடத்தைக் கட்டி முடிக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முடிவு செய்திருக்கிறது. அதன்படி 2022ஆம் ஆண்டில், புதிய கட்டடத்தில்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் என்பதும் மத்திய அரசின் நம்பிக்கை.